மொனராகலை, ஒக்கம்பிட்டிய நகரில் உள்ள அரச வங்கி ஒன்றில் வழங்கப்பட்ட ஏ.ரி.எம் அட்டையை பயன்படுத்தி இரண்டு தடவைகள் 4 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஏ.ரி.எம் அட்டையின் உரிமையாளர் விவசாய பணிகளுக்காக வாகனமொன்றை குத்தகைக்கு விட்டுப் பெற்றுக்கொண்ட பணத்தை கணக்கில் வைப்பிலிட்டு திரும்பிச் சென்று கொண்டிருந்த போது ஏ.ரி.எம் அட்டை தவறி விழுந்து காணாமல் போயுள்ளது. இந்நிலையில் வங்கி கணக்கைச் சரிபார்த்தபோது, இரண்டு முறை பணம் எடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கடந்த 3 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் வங்கியின் பாதுகாப்பு கமராக்களை ஆராய்ந்து பார்த்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் தரையில் கிடந்த ஒரு துண்டு காகிதத்தில் பின் எழுதப்பட்ட இரகசிய இலக்கத்துடனான ஏ.ரி.எம.; அட்டையை எடுத்ததாகவும் பின்னர் அதனூடாக பணத்தை பெற்றுக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


















