]ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவியில் மாற்றம் வரப்போவதல்லையெனினும், கட்சிக்குள் மறுசீரமைப்பு இடம்பெற்று, வியூகம் மாற்றம் ஏற்படுத்தப்படுமென அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி இரு ஜனாதிபதித் தேர்தல்கள் உட்பட நான்கு தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்துள்ளது.இதனால், தலைமைப் பதவியில் மாற்றம் வேண்டும் என்ற கருத்தை சிலர் முன்வைத்து வரும் நிலையிலேயே, துஷார இந்துனில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி வருகின்றது.எந்த முறைமையில் தேர்தல் நடைபெறும் என்பது தொடர்பான தகவல் வெளியான பின்னரே பிரச்சார வியூகம் வகுக்கப்படுமென குறிப்பிட்ட அவர் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன் – என்றார்.


















