-வி.சரவணன்-
முல்லைக் கல்வி விருட்சத்தின் அகில உலக நண்பர்கள் அமைப்பினால் முல்லைத்தீவு கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டது.
கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் ம.சுரேஸ்தரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உரைகளும் இடம்பெற்றன. தொடர்ந்து 100 மாணவர்களுக்கு புத்தகப்பைகள் கையளிக்கப்பட்டன.

நிகழ்வில் விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைக் கல்வி விருட்சத்தின் அகில உலக நண்பர்கள் அமைப்பின் திட்டமிடல் பணிப்பாளர் ஜோசப் பாக்கியராசா, கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் நாகப்பர் கந்ததாசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


















