உயர் தரங்களில் கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆய்வின் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக இலங்கை சிறுவர் மற்றும் இளம் பருவத்தினர் தொடர்பான மனநல வைத்திய நிபுணர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்துள்ளார்.
உலக மனநல தினத்தை முன்னிட்டு இன்று கருத்து தெரிவித்த போதே பேராசிரியர் மியுரு சந்திரதாச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர் தரங்களில் கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்துள்ளார்.
கல்வியின் கடுமையான அழுத்தம், வீட்டில் பெற்றோருடனான பிரச்சினைகள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் பிள்ளைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான அழுத்தம் ஆகியவை இந்த மன அழுத்தத்திற்குக் காரணங்கள் என்பதை இந்த மனநல சோதனை கண்டறிந்துள்ளது.
மேலும் இலங்கையின் மக்கள் தொகையில் 19மூ பேர் மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் கொண்டுள்ளனர் என்பதை இது காட்டுகிறது என்றார்.


















