புதையல் தோண்டியதன் மூலம் கிடைத்ததாக சந்தேகிக்கப்படும் மாணிக்கக் கல் ஒன்றை விற்பனை செய்ய முயன்ற மூன்று சந்தேக நபர்கள் கற்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் புத்தளம் – கற்பிட்டி, ஹித்தலிய, எத்தால பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் வென்னப்புவை, ஹித்தலிய மற்றும் அலங்குடாவ பிரதேசங்களில் வசிக்கும் 56, 34 மற்றும் 51 வயதுடையவர்கள் ஆவர்.
இவர்களில் வென்னப்புவை பிரதேசத்தைச் சேர்ந்தவர் இதற்கு முன்னரும் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.















