-த.அம்பிகாவதி-
விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் பச்சிலைப்பள்ளி பிரதே செயலர் பிரிவிற்குட்பட்ட முகாவில் கிராமத்தில் செய்கை பண்ணப்பட்ட மாதுளை அறுவடை விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேற்படி கிராமத்தில் ஜெயராசசிங்கம் தினேஷ் என்ற விவசாயின் தோட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் , கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு.முரளிதரன் , பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் இ. த. ஜெயசீலன் , முன்னாள் ASMP மாகாண திட்ட பணிப்பாளர் பி.விஜிதரன், மாவட்ட விவசாய பணிப்பாளர் எஸ்.ராஜேஷ்கண்ணா, வடக்கு மாகாண உதவி பிரதம செயலாளர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் மற்றும் அரச உத்தியோகத்தர்கள், விவசாயிகள் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் இலங்கையில் வளம் கூடியதும், வறுமை கூடியதுமான மாகாணம் எமது மாகாணம்தான். வளங்களை உரிய முறையில் பயன்படுத்தாமையால் வறுமையிலும் முன்னிலையில் இருக்கின்றோம்.
விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு சிறப்பான விலை கிடைக்க வேண்டுமாக இருந்தால் கொள்வனவில் போட்டித்தன்மை தேவை. அவ்வாறான போட்டித்தன்மையான கொள்வனவை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக விவசாயமும் வருமானம் கூடிய துறையாக மாறும் என்ற நம்பிக்கையிருக்கிறது என தெரிவித்தார்.


















