-மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன்-
மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 50 வீட்டுத்திட்ட வீடுகளை முன்னுரிமை அடிப்படையில் மீளமைத்துக்கொடுக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு, மாந்தைகிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 50 வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள அனைத்து வீடுகளும் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளதால் குடியிருப்பாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்துவருகின்றனர். இவ் வீடுகளை முன்னுரிமை அடிப்படையில் மீள அமைத்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரினார்.
இந்நிலையிலேயே குறித்த வீடுகளை முன்னுரிமை அடிப்படையில் அமைத்துக்கொடுக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் பதிலளித்தார்.


















