-செ.ரவிசாந்-
மானிப்பாய் இந்துக் கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்லூரியின் லியோ கழகம் இணைந்து நடாத்திய இரத்ததான முகாம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

மாணவர்களின் சமூகப் பொறுப்புணர்வை வளர்த்துக் கொள்ளும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என 25 பேர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கி உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.


















