-த.சுபேசன்-
ஜெசாக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் ‘இணைந்து ஒளிரும் மலர்கள் நிகழ்வு’ இடம்பெற்றது.
கொடிகாமம் நட்சத்திரமஹால் மண்டபத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள் பங்குபற்றிய இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்து சிறப்பித்திருந்தார்.
மேலும் ஜெசாக் நிறுவன ஆளுநர் சபைத் தலைவரும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியருமான இ.சுரேந்திரகுமாரன், உள மருத்துவ நிபுணர் வைத்தியர் சி.சிவதாஸ்,சட்டத்தரணி கோசலை மதன், தென்மராட்சிப் பிரதேச செயலர எப்.சி. சத்தியசோதி ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இதன்போது கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம்,கிளிநொச்சி பாரதி வித்தியாலயம், சாவகச்சேரி சக்தி அம்மன் தமிழ்க் கலவன் பாடசாலை, முல்லைத்தீவு ,வள்ளிபுனம் மகா வித்தியாலயம், புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க பாடசாலை, பளை மத்திய கல்லூரி, நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.


















