மாவனெல்லை – மாணிக்கவ பகுதியில் கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தில் மண்மேடு சரிந்து விழுந்த நிலையில் மண்ணுக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டதையடுத்து மற்றுமொரு தொழிலாளரின் சடலம் சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த அனர்த்தம் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று தொழிலாளர்கள் மண்ணுக்குள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு மண்ணுக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்ற நிலையில் தொழிலாளர்கள் இருவரின் சடலங்கள் முதலில் மீட்கப்பட்டன.
இந்நிலையில் மண்ணுக்குள் சிக்கிய மற்றைய தொழிலாளரும் சற்றுமுன்னர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அதன்படி. மொத்தமாக மூன்று தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

















