நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் ஏற்படும் மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் சில இடங்களில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
எனவே, மின்சாரத்தடை ஏற்பட்டால் இலங்கை மின்சார சபையின் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும்.
இந்த அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.















