கடந்த செப்டெம்பரில் இலங்கை மின்சார சபையால் மின்சார கட்டணத்தை 6.8 சதவீதத்தால் அதிகரிக்க முன்வைக்கப்பட்ட முன்மொழிவு குறித்து பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் முடிவு அடுத்த இரண்டு வாரங்களில் வழங்கப்படும் என பயன்பாட்டு ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அதன்படி இந்த மாதம் 15ஆம் திகதி அல்லது அதற்குள் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார கட்டணத் திருத்தத்திற்கான பொது ஆலோசணை செயல்முறை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 8ஆம் திகதி மேல் மாகாண கலந்துரையாடலில் இறுதி அமர்வு நடைபெற்ற பின்னர் கட்டணத் திருத்தம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்தக் கட்டணத் திருத்தம் மின்சாரச் சட்டம் மற்றும் மின்சாரக் கட்டணச் சூத்திரத்தின்படி மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு ஒக்டோபர் முதல் டிசெம்பர் வரையிலான காலகட்டத்தில் மின்சாரசபை ரூ.1769 மில்லியன்ட பற்றாக்குறையை மதிப்பிட்டுள்ளது. மேலும் அதை ஈடுகட்ட 6.8 சதவீத கட்டண உயர்வு முன்மொழியப்பட்டது.


















