1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரையை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதவான் த.பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் கடந்த 23.9.2025 அன்று கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரியினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அகழ்வு தொடர்பான பாதீடு மற்றும் அதன் விரிவாக்கம் நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தின் ஊடாக நிதி அமைச்சுக்கும் நீதி அமைச்சுக்கும் அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கானது குறித்த செயன்முறை தொடர்பான விடயங்களின் முன்னேற்றங்களை ஆராய இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

















