-கடற்றொழில் அமைச்சர் உறுதியளிப்பு-
கடற்றொழிலாளர்களுக்கு தேவையான எரிபொருளை உரியவாறு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான நிலமை ஓரிரு வாரங்களில் வழமைக்கு திரும்பும்.
இருப்பினும், கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாகவும். அதன்படி, எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு கடற்றொழிலாளர்கள் ஏதேனும் சிக்கலை எதிர்நோக்கினால், அதனை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


















