தம்மை பராமரிக்குமாறு 200 க்கும் மேற்பட்ட முதியோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாடுகள் முதியோர்களுக்கான தேசிய செயலகம் அறிமுகப்படுத்திய 0707898889 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கு கிடைத்துள்ளன.
இந்த செயலகத்தின் பணிப்பாளர் சத்துர மிஹிதும் கூறியதாவது,
சரண உதவி சேவையை தொடர்பு கொள்ள இந்த வாட்ஸ்அப் இலக்கம் பயன்படுத்தலாம்.
முதியோர்களின் முறைப்பாடுகளை பரிசீலிப்பதற்காக புதிய பராமரிப்பு சபை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடுகளை சமர்ப்பித்தவர்களுடன் விரைவில் பிரதேச செயலக அலுவலகங்கள் இணைய வழியாக நேரடியாக தொடர்புகொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
முதியோரின் நலனை உறுதி செய்வதற்காக தேசிய செயலகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.


















