2017 முதல் 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் வரை முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவைகளுக்கான செலவுகளுக்கான மொத்தம் ரூபா 491.2மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோத்தபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் விதவை மனைவி ஹேமா பிரேமதாச ஆகியோரின் ஓய்வூதியம், வாகனங்கள் மற்றும் பிற தொடர்ச்சியான செலவுகளை இந்தச் செலவு உள்ளடக்கியது.
இந்த அறிக்கையின் படி ஹேமா பிரேமதாச, சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் 2017 முதல் மைத்திரிபால சிறிசேன 2019 முதல் கோத்தபய ராஜபக்ஷ 2022 முதல் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் 2024 முதல் சலுகைகளுக்கு உரிமை பெற்றுள்ளனர்.


















