இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாசவை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற புனரமைப்பு பணிகளில் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் மற்றும் சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு 1.6 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நிலு தில்ஹார விஜேதாச இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைதுசெய்யப்பட்ட நிலு தில்ஹார விஜேதாச கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்தான அடுத்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


















