-ஞானத்தமிழ்-
வவுனியா பல்கலைக்கழகத்தினால் ‘முயற்சியாண்மையும் சிறுவியாபார முகாமைத்துவமும்’ கற்கைநெறியின் நான்காம் அணிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
இக்கற்கைநெறி புதிய தொழில் முயற்சியை ஆரம்பிக்கவுள்ளவர்களுக்கும், தமது தொழிலை விஸ்தரிக்க முயற்சிப்பவர்களுக்கும், சவால்களை எதிர்கொண்டு தொழிலை வெற்றிகரமாக முன்னகர்த்துவதற்கும் ஒரு சிறந்த சந்தர்ப்பம்.
அத்துடன் க.பொ.த உயர்தரம் மற்றும் க.பொ.த சாதாரண தரம் படித்துவிட்டு தொழிலுக்காக காத்திருப்போர் அல்லது புதிதாக தொழில் முயற்சியை உருவாக்க எதிர்பார்ப்போர் இக்கற்கைநெறியை தொடர்வதன் மூலம் புதிய தொழிலை உருவாக்குவதற்கும் அதனை வினைத்திறனாக முன்னகர்த்துவதற்கும் வழிவகுக்கும். ஒரு அணியில் 40 மாணவர்கள் எனும் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி வழங்கப்படுவதால் ஆர்வமுள்ளவர்கள் தாமதமின்றி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கற்கைநெறி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு இணைப்பாளர், முயற்சியாண்மையும் சிறு வியாபார முகாமைத்துவமும் கற்கைநெறி, தொலைபேசி இலக்கம் 0774683308 அல்லது அலுவலக தொலைபேசி இல. 0242223910 அல்லது மின்னஞ்சல் : cdce@vau.aclk தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கற்கை நெறிக்கான விண்ணப்பப் படிவத்தை https://www.vau.ac.lk/certificate-in-entrepreneurship-and-small-business-management-batch-iv-2025-2026/ என்ற இணைப்பில் பெற்றுக்கொள்ளுமாறும் விண்ணப்பிக்க விரும்புவோர் நவம்பர் 25 ஆம் திகதிக்கு முன்பாக அல்லது அன்றைய தினம் கிடைக்கக் கூடியதாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ‘உதவிப் பதிவாளர் ,தொலைதூர மற்றும் தொடர் கல்விக்கான மையம், வவுனியா பல்கலைக்கழகம், பூங்கா வீதி, வவுனியா என்ற முகவரிக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


















