பொய் கூறுவதை நிறுத்திவிட்டு முறையாக மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பிக்காவிடின் எந்தவொரு நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க தாயாராக இருக்கிறோம் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேற்றைய கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக எந்த பயமும் இல்லாமல் கூடிய மக்களுக்கு எனது வணக்கங்கள். இது எங்களின் சுயநலனுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி அல்ல மக்களின் தேவைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி.
சதாரண மக்களுக்கு வரிகளை விதித்து இன்று மக்களிடம் கூறிய அனைத்தையும் மறந்து விவாசாயிகளை வீதிக்கு கொண்டு வந்த அரசாங்கம் இது, தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதாக கூறி வந்தவர்கள் தினந்தோரும் தொழில்பேட்டைகளை மூடுகிறார்கள், கல்விமுறையை இல்லாமல் செய்ய முயற்சிக்கும் ஒரு அரசாங்கம்.
அரசாங்கம் தனது வாக்குறுதிகளை மறந்து தற்போது ஆட்சியமைத்து வருகிறது. அவர்கள் கூறிய வாக்குறுதிகளை நினைவுகூரவே நாங்கள் கூடியுள்ளோம் தயவு செய்து பொய்கள் கூறுவதை நிறுத்தி விடுங்கள். பொதுமக்களுக்காக சேவை செய்ய ஆரம்பியுங்கள்.
பொய் கூறுவதை நிறுத்திவிட்டு முறையாக மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பிக்காவிடின் எந்தவொரு நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க தாயாராக இருக்கிறோம் என்றார்.


















