உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, கிளீன் சிறிலங்கா செயற்றிட்டம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் என்பன இணைந்து நடாத்திய ‘கி;ளீன் சிறிலங்கா – ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு’ என்ற தேசிய திட்டத்திற்கு அமைவான நடமாடும் சேவை மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டம் என்பன முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நடமாடும் சேவையில் 1,109 பேர் கலந்து கொண்டு பயனடைந்திருந்தனர். இதன்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கப்பட்டதுடன் வறுமையில் கல்வியைத் தொடரும் ஒரு தொகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது. அத்தோடு தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டன.
இந்த நடமாடும் சேவைகள் மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டத்தில் அண்மைய வெள்ள அனர்த்தம காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண சேவைகளும் வழங்கப்பட்டன.


















