-முல்லை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை-
-செ.சுமந்தன்-
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு வட மாகாண பொலிஸ் திணைக்களத்திடம் முல்லை மாவட்ட அரச அதிகாரிகள் சங்கத்தினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிலாவத்தை சிறுமி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரி முல்லைத்தீவு மாவட்ட மக்கள் இன்று காலை நீதி கோரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ள நிலையில் மாவட்ட மருத்துவமனையில் பணியில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள், சுகாதார பணியாளர்களுக்கும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மருத்துவமனையின் செயற்பாட்டினை உறுதி செய்ய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இதனை உடனடி கவனத்தில் எடுக்குமாறும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


















