-த.சுபேசன்-
சாவகச்சேரி பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட கைதடிப் பகுதியில் சில இடங்களில் உள்ள வடிகால்கள் முழுமையாக மூடப்படாமையால் விபத்துக்கள் ஏற்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேசசபை உறுப்பினர் செ.ஜெயபாலன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை வங்கியின் கைதடி கிளைக்கு முன்பாக, கைதடி ஆயுர்வேத வைத்தியசாலை அருகில், தென்மராட்சி மேற்கு பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம் முன்பாக, கைதடி தவறணை வீதிக்கு செல்லும் பகுதி மற்றும் கைதடி மேற்கு பேருந்து நிழற்குடை முன்பாக என முக்கியமான இடங்களில் வடிகால்கள் முழுமையாக மூடப்படாது இருப்பதனால் பொதுமக்கள் விபத்துக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்துடன் கைதடியில் உள்ள வடிகால்களில் கழிவுநீர் வழிந்தோடாமல் தேங்கி நிற்பதாகவும் மக்கள் முறையிட்டுள்ளனர். எனவே பிரதேசசபை இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்க முன்வர வேண்டும் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.


















