3 கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரான இந்தியப் பிரஜை கொண்டு வந்த பயணப் பொதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 2 கிலோ 832 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள நபரொருவருக்கு வழங்குவதற்காக போதைப்பொருளை கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


















