மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரூஹீணு பல்கலைகழக மாணவர்களை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது மதிப்பெண்கள் தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, ரு{ஹணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஆறு மாணவர்கள் காயமடைந்திருந்தனர்.
இந்தச் சம்பவம் ஆரம்பத்தில் சுமூகமாக தீர்க்கப்பட்டாலும், நேற்றுமுன்தினம் மீண்டும் பதட்டங்கள் ஏற்பட் டதையடுத்து, மோதல் ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த, பல்கலைக்கழக நிர்வாகம் திங்கட்கிழமை, மாணவர்களை பீட வளாகத்திலிருந்து தற்காலிகமாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


















