உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ். நீரிழிவுக் கழகம் நடத்தும் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மதர்கெயார் வைத்திய நிலைய வளாகத்தில் புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் ஆர்.சுரேந்திரகுமாரன் ஆரம்பித்து வைக்கும் இந்த இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த பரிசோதனைகள், உடல் திணிவுச் சுட்டி மற்றும் வைத்திய ஆலோசனை என்பன இடம்பெறவுள்ளன.


















