வட மாகாண விவசாய அமைச்சின் நன்னீர் மீன்பிடி அலகினால் நடாத்தப்படும் நன்னீர் மீன் உற்பத்தி மற்றும் பெறுமதி சேர் உணவு வகைகளின் கண்காட்சியும், விற்பனையும் நவம்பர் முதலாம், இரண்டாம் திகதிகளில் (நாளை சனிக்கிழமையும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும்) பிற்பகல் 2 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை யாழ்ப்பாணம் முற்றவெளியில் (பண்ணை சுற்றுவட்ட வீதி அருகாமை) இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் வட மாகாணத்தின் நன்னீர் மீன்களின் பெறுமதி சேர் உணவு வகைகள், அம்மாச்சி உணவு தயாரிப்புகள், உள்ளூர் உற்பத்தியாளர்களான கற்பகம், ஜசுபி மற்றும் தொழிற்துறைத் திணைக்களம், சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு ஆகியவற்றின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
மீன்பிடித்துறை, யாழ். பல்கலைக்கழகம், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகாரசபை, வடமாகாண சுற்றுலா பணியகம் ஆகியவற்றின் காட்சிப்படுத்தல்களும் இடம்பெறவுள்ளன.


















