-கஜிந்தன்-
யாழ்ப்பாணத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடும் முகமாக மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்வத்துடன் பொருள் கொள்வனவில் ஈடுபட்டனர்.

நேற்று முற்பகல் பொய்த மழையிலும் உடு புடவைகள், பட்டாசுகள், இனிப்புப் பண்டங்கள், ஆபரணங்கள் போன்றவற்றை மக்கள் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது. இதனால் யாழ். நகரத்தில் வாகன நெரிசல் காணப்பட்டது.



















