-சி.ஜெகதீஸ்வரன்-
யாழ்ப்பாணத்திலுள்ள இரும்பகமொன்றில் தகரத்தினை நகர்த்த முற்பட்ட சமயம் தகரம் வெட்டியதில் படுகாயம் அடைந்திருந்த பணியாளரொருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறையைச் சேர்ந்த கரிகரராசா தனஸ்குமார் (வயது-36) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி தகரத்தினை நகர்த்த முயன்ற போது குறித்த பணியாளர் தகரம் வெட்டியதில் படுகாயமடைந்ததையடுத்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை யாழ்ப்பாண பொலிஸார் நெறிப்படுத்தினர்.


















