யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை – பொலிகண்டி ஆலடிப் பகுதியில் படகு மற்றும் கடல் தொழில் உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளன.
இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 1:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது பல இலட்சம் பெறுமதியான படகு மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளன.
சம்பவத்திற்கான காரணம் இது வரைக்கும் தெரியவரவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















