யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டதால் தளபாடங்கள் மற்றும் சரக்குகள் என்பன சேதமாகியுள்ளன.
இந்தத் தீ பரவல் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பல்பொருள் விற்பனை நிலைய உரிமையாளர் நேற்றையதினம் விற்பனை நிலையத்தை பூட்டிவிட்டு சென்று, மீண்டும் இன்று வியாழக்கிழமை காலை வியாபார விற்பனை நிலையத்தை திறந்துபார்த்த போது விற்பனை நிலையத்தின் உட்பகுதி முழுவதும் தீயில் எரிந்து உள்ளதை அவதானித்து உள்ளார்.
அதன்பின் குறித்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு ஒன்றை மருதங்கேணி பொலிஸாரிடம் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

















