யாழில் Uber சேவைக்கு அதிகரிக்கும் வரவேற்பு! – சாரதிகளுக்கு 0% Commission
யாழ்ப்பாணத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் செயலி மூலம் பயண சேவையை ஆரம்பித்த அ. தவதீசன், சாரதிகளின் நலனை முன்னிறுத்தி தொடர்ந்து சேவையை முன்னெடுத்து வந்த நிலையில், தற்போது Uber நிறுவனத்துடன் இணைந்து யாழில் Uber சேவையை முன்னெடுத்து வருகிறார்.
இதன் மூலம் சாரதிகளிடமிருந்து பெறப்படும் Commission 0% ஆக மாற்றப்பட்டுள்ளதுடன், முதல் 2 கிலோமீற்றருக்கான கட்டணம் ரூ.200 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆறு மாதங்களில் Uber சேவைக்கு யாழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு புதிய செயலியை பதிவிறக்கம் செய்யும் பயணிகளுக்கு 50% கட்டணச் சலுகையும், ஏற்கனவே சேவையை பயன்படுத்துவோருக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
மேலும், பயணிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சாரதி மற்றும் பயணியின் தொலைபேசி இலக்கங்கள் இரகசியமாக வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நல்லூர் திருவிழா காலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பொலிஸாருக்காக Uber நிறுவனத்தால் நான்கு கூடாரங்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

















