யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாகத்திற்காக 2026ம் ஆண்டுக்கான பாதீட்டில் சுமார் 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறினார்.
2026ம் ஆண்டுக்கான பாதீட்டை நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
உள்ளூர் விமான போக்குவரத்தை பிரபல்யப்படுத்துவது சுற்றுலாக் கைத்தொழில் வளர்ச்சிக்கு இன்றிய மையாததாகும். இதற்காக யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் செயற்பாடு – நடவடிக்கைகளை விரிவாக்குதல் ஆகியவற்றுக்கு ரூபா 1,000 மில்லியன் மேலதிக ஒதுக்கத்தை பெற்றுக்கொடுப்பதோடு இவ் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சிவில் விமான சேவை அதிகாரசபையின் பங்களிப்பும் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளோம் என்றார்.


















