மீரிகம மற்றும் வில்வத்த ரயில் நிலையங்களுக்கு இடையில் எரிபொருள் ரயில் ஒன்று தடம் புரண்டதையடுத்து பிரதான பாதையில் ரயில் போக்குவரத்து நேற்று பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் மீரிகம மற்றும் வில்வத்த ரயில் நிலையங்களுக்கு இடையில் ஒரு வழித்தடத்தில் ரயில்களை இயக்க ரயில்வே கட்டுப்பாட்டு அறை நடவடிக்கை எடுத்ததால் பல ரயில்களின் பயணங்கள் தாமதமாகின.
மட்டக்களப்பிலிருந்து கொலன்னாவை நோக்கி பயணித்த எரிபொருள் ரயில் நேற்று அதிகாலை 4.45 மணியளவில் தடம் புரண்டது.
ரயிலின் ஐந்தாவது பெட்டியில் ஒரு ஜோடி சக்கரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விரைவில் ரயில் சேவைகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

















