வடமாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை ஒருபோதும் விடுவிக்ககூடாது. இராணுவமே வைத்திருக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தேர்தல்கால வாக்குறதிகளின் காரணமாக தேசிய பாதுகாப்பு, கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து விட்டது என்று குறிப்பிட முடியாது. எதிர்காலத்தில் யுத்தம் ஒன்று தோற்றம் பெறலாம். ஆகவே அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியம்.
வடமாகாணம் தேசிய பாதுகாப்பின் பிரதான கேந்திர மையமாக உள்ளது. வடக்கில் காணிப் பிரச்சினை காணப்படுகிறது. தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு காணி விடுவிப்பு குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும். தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிக ளை இராணுவத்தினர் வசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணிகளை அல்லது நஷ்டஈட்டை அரசாங்கம் வழங்க வேண்டும். வடமாகாணத்தில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெறாத வகையில் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகள் முறையாக அடையாளப்படுத்தப்பட வேண்டும். வடக்கு மக்களுக்கு அநீதி இழைக்க வேண்டும் என்று நாங்கள் குறிப்படவில்லை.
வடக்கில் வாக்குப் பெறுவதற்கான வாக்குறதிகளுக்கு முன்னுரிமை வழங்கலாம் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்றார்.


















