-வடக்கு சுற்றாடல் அமைச்சு செயலாளர்-
-சொ.வர்ணன்-
வடக்கு மாகாணத்தில் பார்த்தீனியத்தை கட்டுப்படுத்த சட்ட நடவடிக்கைகைகளுக்கான தயார்படுத்தல்கள் இடம்பெற்று வருவதாக வடமாகாண விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர் வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவசிறீ தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட விவசாய மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலில் பார்த்தீனிய கட்டுப்பாடு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் பார்த்தீனிய கட்டுப்பாடு அத்தியாவசிய பிரச்சினையாக எழுந்துள்ளது.
பார்த்தீனியத்தை கட்டுப்படுத்துவதற்கு அரச உத்தியோகத்தர்களை மட்டும் வைத்து கட்டுப்படுத்த முடியாத நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் உருவாக்கப்பட்ட வேண்டும்.
அதற்காக அரச உத்தியோகத்தர்கள் சுமார் 70 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்படுவருகின்ற நிலையில் விரைவில் பாதீனியத்தை கட்டுப்படுத்த தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


















