-நிதியுதவியும் 2 மில்லியனாக அதிகரிப்பு-
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்னமும் வீடுகள் இன்றி தவிக்கும் 13,069 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது நாட்டில் நிலவும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கருத்திற்கொண்டு, ஒரு வீட்டிற்கு வழங்கப்பட்ட 9 இலட்சம் ரூபா நிதியுதவி தற்போது 2 மில்லியன் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதி உயர்வுக்கான அனுமதியினை அமைச்சரவையும் வழங்கியுள்ளது.


















