வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு அதிபர் திருமதி சத்தியபாமா நவரட்ணம் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கல்வி அமைச்சின் பாடசாலை அபிவிருத்தி பிரிவின் தமிழ் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி பாலராணி ஸ்ரீதரன், விசேட அதிதியாக கரவெட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வேலுப்பிள்ளை புவனேந்திரராஜா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.


















