-ஞானத்தமிழ்-
வடக்கு மாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை மார்ச் 23 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. தவணைப் பரீட்சை அட்டவணை வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பரீட்சை தரம் 6 முதல் தரம் 9 வரையான மாணவர்களுக்கு மார்ச் 25 ஆம் திகதி புதன்கிழமை முதல் ஏப்ரல் 6 ஆம் திகதி திங்கட்கிழமை வரையும், தரம் 10 மாணவர்களுக்கு மார்ச் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் ஏப்ரல் 2 ஆம் திகதி வியாழக்கிழமை வரையும், தரம் 11 மாணவர்களுக்கு மார்ச் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் ஏப்ரல் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரையும், தரம் 12 மாணவர்களுக்கு மார்ச் 25 ஆம் திகதி புதன்கிழமை முதல் ஏப்ரல் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரையும் மற்றும் தரம் 13 மாணவர்களுக்கு மார்ச் 23 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஏப்ரல் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரையும், தரம் 3 முதல் தரம் 5 வரையான மாணவர்களுக்கு ஏப்ரல் 6 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஏப்ரல் 8 ஆம் திகதி புதன்கிழமை வரையும் நடைபெறவுள்ளன.


















