-த.சுபேசன்-
தென்மராட்சி, வரணி நிதி அக்கடமி மற்றும் சாவகச்சேரி லைசியம் உயர் கல்லூரி ஆகியவற்றின் கல்விச் சாதனையாளர் கௌரவிப்பு மற்றும் பிரிவுபசார நிகழ்வு ஆகியன அண்மையில் வரணியில் இடம்பெற்றிருந்தன.
நிதி அக்கடமியின் நிர்வாக இயக்குனர் ஞானநிரோயன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் கலந்து சிறப்பித்திருந்தார்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக ஆயுர்வேத வைத்தியர் மிராஜ்,கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திசாநாயக்க, முன்னாள் அதிபர் அ.தங்கவேலு, வரணி மத்திய கல்லூரி அதிபர் கோகிலராகவன், இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலய அதிபர் தி.அபராஜிதன் கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி இ.ஞானச்சந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.


















