-செ.ரவிசாந்-
வரலாற்று பிரசித்தி பெற்ற மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலயத்தின் விசுவாவசு வருட மஹோற்சவ காலத்தை முன்னிட்டு மஹோற்சவ கால வழிபாடு நாளை வியாழக்கிழமை முதல் அடுத்த மாதம் 3 ஆம் திகதி சனிக்கிழமை வரையான பத்துத் தினங்கள் பக்திபூர்வமாக இடம்பெறவுள்ளது.
பத்து நாட்களும் விசேட அபிஷேகம், பூஜை வழிபாடுகள் நடைபெறுமென மேற்படி ஆலய தர்மகர்த்தா தெரிவித்துள்ளார். இதற்கமைய அபிஷேகம் காலை 9.30 மணியளவிலும், மாலை அபிஷேகம் 4.05 மணியளவிலும் ஆரம்பமாகுமெனவும் அவர் குறிப்பிட்டார்.


















