-பா.சதீஸ்-
கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வற்றாப்பளை தெற்கு சனசமூக நிலையம் 1953 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பின்னர் பல ஆண்டுகள் இயங்காத நிலையில் இருந்து வந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் குறித்த சனசமூக நிலையம் புனரமைக்கப்பட்டு நேற்று முன்தினம் மக்களுடைய பாவனைக்காக மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.
நிலையத்தின் தலைவர் சதீஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கரைதுறைப்பற்று சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் விக்ரர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் ஞா. ஜீட்சன், சிறப்பு விருந்தினராக புனரமைப்பிற்கான நிதிப் பங்களிப்பை வழங்கியிருந்த புலம்பெயர் நாட்டில் வசிக்கும் செல்வராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் கிராம மட்ட அமைப்பினர், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


















