-இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா வடக்கு செயலாளர்-
வவுனியா வடக்கு கல்வி சமூகத்தின் மீது விரோதத்தை கக்கிய வன்னி மாவட்ட நாடாhளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்புக் கோர வேண்டும். இன்லையெனில் போராட்டத்தில் இறங்குவோம் என வவுனியா வடக்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ல.சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு கல்வி வலயம் , ஆசிரியர்களின் கற்பித்தல் மற்றும் மாணவர்களின் பெறுபேறுகள் தொடர்பாக வன்னியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அவதூறுகளை பரப்பியுள்ளனர் இது மிகவும் கண்டிக்கப்படக் கூடியது.
ஆசிரியர்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் சேவையாற்றும் போது இவ்வலயத்தில் கற்பித்த நாடாhளுமன்ற உறுப்பினர் தனிப்பட்ட சொந்த விடயங்களுக்காக ஒட்டு மொத்த வலயத்தை பழி சுமத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நுpகழ்வில் பங்கேற்றிருந்த அமைச்சர் கூட இது அபிவிருத்திக் கூட்டம் அதை தனியே கதைப்போம் என்றார். ஆனால் தனிப்பட்ட விரோதம் காரணமாக அக்கூட்டத்தில் ஒரு அதிகாரி கூறிய தரவுகளைக் கூட கேட்காமல் நிற்க வைத்து கேள்வி கேட்கும் இவர்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பொது வெளியில் பகிரப்படுவதுடன் இது தொடர்பாக மன்னிப்புக் கோரி அறிக்கை விடாவிட்டால் எமது சங்கம் போராட்டத்தில் இறங்கும் என செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















