வவுனியா மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் வயல் விழா நேற்று இடம்பெற்றது.
படுகையில் இருந்து அறுவடை வரை எனும் தொனிப்பொருளில் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தினால் குறித்த நிகழ்வானது ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
இதன்போது அதிகாரிகளுக்கு மலர் கொத்து வழங்கப்பட்டு அதிதிகள் அழைத்து வரப்பட்டதுடன், மக்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
மேலும் பயிற்சி நிலையத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்லினை பாரம்பரிய முறைப்படி அறுவடை செய்து நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தனர்.
பண்ணை முகாமையாளர் எம்.அஜந்தகுமாரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர், கால்நடை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



















