வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் வீதியில் குப்பை கொட்டுவதை அவதானித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வீதிகளில் பல இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவதாக பிரதேசசபையின் தவிசாளர் பாலேந்திரன் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் மாசு மற்றும் வீதியோர கழிவு அகற்றுவதில் ஏற்படுகின்ற பல்வேறு நெருக்கடிகளை கருத்திற் கொண்டு பிரதேச சபைக்குட்பட்ட 57 இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் நேற்று முன்தினம் பொருத்தப்பட்டன.
வீதியோரங்களில் குப்பை கொட்டுவோரை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்கும் நோக்கோடு குறித்த கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டதோடு பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகளும் இதன் ஊடாக கண்காணிக்கப்படும் எனவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.


















