-சி.ஜெகதீஸ்வரன்-
காங்கேசன்துறை உதயசூரியன் சனசமூக நிலையத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்களிடையே வாசிப்புப் போட்டி நடாத்தப்பட்டது.
காங்கேசன்துறை சந்தை வீதியில் அமைந்துள்ள உதயசூரியன் சனசமூக நிலைய மண்டபத்தில் தலைவர் பூ.பிரபாகர் தலைமையில் வாசிப்பு போட்டிகள் நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்றது.
மாணவர்களை மூன்று வகைப்படுத்தி, நடுவர்களால் வழங்கப்பட்ட இராமாயணக் கதையின் சிறு பகுதிகளை மாணவர்கள் வாசித்தனர்.
இதில் முதல் இடங்களைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு பரிசில்களும், வாசிப்பு போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்களும் வழங்கப்பட்டன.
இப் போட்டிக்கு நடுவர்களாக காங்கேசன்துறை நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலய அதிபர் திருமதி வசந்தராணி சுதர்சன், தமிழ் ஆசிரியர் இரத்தினசிங்கம் விஜய் ,ஊடகவியலாளர் மு.மதிவாணன் ஆகியோர் கடமையாற்றினர்.


















