முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ சில நிமிடங்களுக்கு முன்பு கொழும்பு விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்.
இவர் கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் செல்ல உள்ளார் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பார்கள் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

















