போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குரிய உரிமை மக்களுக்கு உண்டு, ஆனால் அந்த உரிமையென்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கானது அல்ல என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நினைவேந்தல் நடத்துவதற்கு 2024 நவம்பரில் இடமளிக்கப்பட்டது. 2025 நவம்பரிலும் அவ்வாறுதான். உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குரிய உரிமை மக்களுக்கு உள்ளது.
எனினும், அந்த உரிமை என்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கானது அல்ல என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் பொது இடங்களில் ஜே.வி.பி. மாவீரர்களுக்கு நினைவிடம் அமைக்கவில்லை. அவர்களுக்கான நினைவு தூபி எம் மனங்களில் இருந்தால் போதும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


















