பலகல்ல பகுதியில் உள்ள தற்காலிக விடுதியொன்றில் அறையிலிருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மஹாவிலச்சிய பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
திவுலபிட்டி பொலிஸாருக்கு கடந்த புதன்கிழமை கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரணத்திற்கான காரணம் உடனடியாக கண்டறியப்படாத நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்று நீதவான் விசாரணைகளை நடத்தியுள்ளார். இதன் பின் சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து திவுலபிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















