இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் குறுகியகால ஆங்கில கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க விரும்புவொர் 16 வயதிற்கு மேற்பட்டவராகவும் க.பொ.த. சாதாரண தரத்தில் முதலாம் மொழி கணிதம் உட்பட ஆறுபாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
விண்ணப்பபடிவங்களை பிறவுண் வீதி, கொக்குவிலில் அமைந்துள்ள பிராந்திய நிலையத்தில் பெற்று விண்ணப்பிக்க முடியும் என யாழ்ப்பாணப் பிராந்திய நிலைய உதவிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.


















