இலங்கைத் திறந்த பல்கலைக்கழக யாழ். பிராந்திய நிலையத்தில் மென்பொருள் பொறியியலில் இளமாணிப் பட்டக் கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப முடிவுத் திகதியன்று 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.
கல்விப் பொதுத் தராதர உயத்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். மேலும் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் 4.01.2026 அன்று நடாத்தப்படும் தேர்வு பரீட்சையிலும் சித்தி பெற்றிருத்தல் கட்டாயமானது.
விண்ணப்பபடிவங்களை www.ou.ac.lk என்னும் இணையத்தள முகவரியில் பிரவேசித்து 30.11.2025 வரை விண்ணப்பிக்க முடியும். மேலதிக விபரங்களிற்கு 021-2223374 தொலைபேசியூடாகவும் கொக்குவில் பிறவுண் வீதியில் அமைந்துள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழக யாழ்.பிராந்திய நிலையத்திலும் தொடர்புகொண்டு விண்ணப்பிக்க முடியும் என உதவிப்பணிப்பாளர் அறிவித்துள்ளார்.


















